240 | மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்; முத்தமிழும் நால்மறையும் ஆனான் கண்டாய்; ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்; ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்; பால விருத்தனும் ஆனான் கண்டாய்; பவளத் தடவரையே போல்வான் கண்டாய்; மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |