Try error :java.sql.SQLException: Closed Resultset: next
447மை அனைய கண்டத்தாய்! மாலும் மற்றை வானவரும்
                        அறியாத வண்ணச் சூலக்
கையவனே! கடி இலங்கைக் கோனை, அன்று, கால்
            விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற
மெய்யவனே! அடியார்கள் வேண்டிற்று ஈயும்
        விண்ணவனே! விண்ணப்பம் கேட்டு நல்கும்
செய்யவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்
             ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.