547 | நெருப்பு அனைய திருமேனி வெண்நீற்றானை, நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற விருப்பவனை, வேதியனை, வேதவித்தை, வெண்காடும் வியன்துருத்தி நகரும் மேவி இருப்பவனை, இடை மருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை, எனை ஆளும் கயிலை என்னும் பொருப்பவனை, புள்ளிருக்கு வேளூரானை, போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே!. |