615 | “விருத்தனே! வேலை விடம் உண்ட கண்டா! விரி சடை மேல் வெண்திங்கள் விளங்கச் சூடும் ஒருத்தனே! உமை கணவா! உலக மூர்த்தி! நுந்தாத ஒண்சுடரே! அடியார் தங்கள் பொருத்தனே!” என்று என்று புலம்பி, நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி, புலம்பி நோக்கி, கருத்தினால்-தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணல் ஆமே!. |