| 674 | தாள் பாவு கமல மலர் தயங்குவானைத் தலை              அறுத்து மா விரதம் தரித்தான் தன்னை,   கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை,     கொடுவினையேன் கொடு நரகக்குழியில் நின்றால்   மீட்பானை, வித்துருவின் கொத்து ஒப்பானை,     வேதியனை, வேதத்தின் பொருள் கொள் வீணை   கேட்பானை, கீழ்வேளூர் ஆளும் கோவை,            கேடு இலியை, நாடுமவர் கேடு இலாரே. |