733விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய்; விலங்கலில்
          வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்;
தண் தாமரையானும், மாலும், தேடத் தழல் பிழம்பு
                    ஆய் நீண்ட கழலான் கண்டாய்;
வண்டு ஆர் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்;
             மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்
            கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.