Try error :java.sql.SQLException: Closed Resultset: next
867வெய்யவன் காண்; வெய்ய கனல் ஏந்தினான் காண்; வியன்
                    கெடில வீரட்டம் மேவினான் காண்;
மெய்யவன் காண்; பொய்யர் மனம் விரவாதான் காண்;
               வீணையோடு இசைந்து மிகு பாடல் மிக்க
கையவன் காண்; கையில் மழு ஏந்தினான் காண்; காமன்
             அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண்;
செய்யவன் காண்; செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன்
           அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.