Try error :java.sql.SQLException: Closed Resultset: next
238வேலை சேர் நஞ்சம், மிடற்றான் கண்டாய்; விண்
             தடவு பூங் கயிலை வெற்பன் கண்டாய்;
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய்;
       அமரர்கள் தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்;
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய்;
           பருப்பதத் தான் கண்டாய்; பரவை மேனி
மாலை ஓர்கூறு உடைய மைந்தன்
   கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.