48நீறு ஏறு நீலமிடற்றாய், போற்றி! நிழல் திகழும்
              வெண்மழுவாள் வைத்தாய், போற்றி!
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய், போற்றி!
         கோள் அரவம் ஆட்டும் குழகா, போற்றி!
ஆறு ஏறு சென்னி உடையாய், போற்றி!
    அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனாய், போற்றி!
ஏறு ஏற என்றும் உகப்பாய், போற்றி!-இருங் கெடில
                   வீரட்டத்து எந்தாய், போற்றி!.