| 55 | கொடுவினையார் என்றும் குறுகா அடி; குறைந்து        அடைந்தார் ஆழாமைக் காக்கும்(ம்) அடி; படு முழவம் பாணி பயிற்றும்(ம்) அடி; பதைத்து         எழுந்த வெங் கூற்றைப் பாய்ந்த(வ்) அடி; கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல்சேவடி; கடல்              வையம் காப்பான் கருதும்(ம்) அடி;  நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி- நிறை                  கெடில வீரட்டம் நீங்கா அடி. |