Try error :java.sql.SQLException: Closed Resultset: next
872அன்றினவர் புரம் மூன்றும் பொடி ஆய் வேவ அழல் விழித்த
                            கண்ணானை; அமரர்கோனை;
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி
                              எடுத்த விகிர்தன் தன்னை;
ஒன்றிய சீர் இரு பிறப்பர் முத்தீ ஓம்பும், உயர் புகழ் நால்மறை,
                                   ஓமாம்புலியூர் நாளும்
தென்றல் மலி வடதளி எம் செல்வன் தன்னை; சேராதே
                          திகைத்து நாள் செலுத்தினேனே!.