207 | பூ விரியும் மலர்க் கொன்றைச் சடையினானை, புறம்பயத்து எம்பெருமானை, புகலூரானை, மா இரியக் களிறு உரித்த மைந்தன் தன்னை, மறைக்காடும் வலி வலமும் மன்னினானை, தே இரியத் திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை, உதைத்து அவன் தன் சிரம் கொண்டானை, நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை,-நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!. |