319புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கிப்
                புறம் புறமே திரியாதே போது, நெஞ்சே!
“சலம் கொள் சடைமுடி உடைய தலைவா!”
   என்றும், “தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய்!” என்றும்,
“இலங்கையர் கோன் சிரம் நெரித்த இறைவா!”
    என்றும், “எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய்!” என்றும்,
“நலம் கொள் அடி என் தலைமேல் வைத்தாய்!”
     என்றும், நாள்தோறும் நவின்று ஏத்தாய்! நன்மை ஆமே.