157பொறுத்திருந்த புள் ஊர்வான் உள்ளான் ஆகி, உள்
       இருந்து, அங்கு உள்-நோய் களைவான் தானாய்,
செறுத்திருந்த மும் மதில்கள் மூன்றும் வேவச் சிலை
              குனியத் தீ மூட்டும் திண்மையான் ஆம்;
அறுத்திருந்த கையான் ஆம், அம் தார் அல்லி
          இருந்தானை ஒரு தலையைத் தெரிய நோக்கி;
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும்;
                 கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே.