177புரிந்தார், நடத்தின்கண்; பூதநாதர்; பொழில் 
          ஆரூர் புக்கு உறைவர்; போந்து தம்மில்
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் 
            பிரியார், ஒரு நாளும்; பேணு காட்டில்
எரிந்தார் அனல்,-உகப்பர்,-ஏழில் ஓசை; எவ் 
          இடத்தும் தாமே என்று ஏத்துவார் பால்
இருந்தார்-இமையவர்கள் போற்ற என்றும் 
           இடைமருது மேவி இடம் கொண்டாரே.