6.24 திருஆரூர்
திருத்தாண்டகம்
242கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
    கறைக்கண்டன்காண்; கண் ஆர் நெற்றியான் காண்;
அம்மான்காண்; ஆடு அரவு ஒன்று ஆட்டினான்காண்;
      அனல் ஆடிகாண்; அயில்வாய்ச்சூலத்தான்காண்;
எம்மான்காண்; ஏழ் உலகும் ஆயினான்காண்;
       எரிசுடரோன்காண்; இலங்கும் மழுவாளன்காண்;
செம் மானத்து ஒளி அன்ன மேனியான்காண்-திரு
                 ஆரூரான்காண், என் சிந்தையானே.