259ஆடுவாய், நீ நட்டம்; அளவின் குன்றா அவி
   அடுவார், அருமறையோர்; அறிந்தேன், உன்னை;
பாடுவார், தும்புருவும் நாரதாதி; பரவுவார்,
                   அமரர்களும் அமரர்கோனும்;
தேடுவார், திருமாலும் நான்முக(ன்)னும்;
         தீண்டுவார், மலைமகளும் கங்கையாளும்;
கூடுமே, நாய் அடியேன் செய் குற்றேவல்?
   குறை உண்டே, திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே?.