265ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை,
               ஊழிதோறு ஊழி உயர்ந்தான் தன்னை,
வருகாலம் செல்காலம் ஆயினானை, வன்
            கருப்புச்சிலைக் காமன் உடல் அட்டானை,
பொரு வேழக்-களிற்று உரிவைப் போர்வையானை,
    புள் அரையன் உடல் தன்னைப் பொடி செய்தானை,
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை,-
          ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.