317மதி தருவன், நெஞ்சமே, உஞ்சு போக! வழி
     ஆவது இது கண்டாய்; “வானோர்க்கு எல்லாம்
அதிபதியே! ஆரமுதே! ஆதீ!” என்றும்;
          “அம்மானே! ஆரூர் எம் ஐயா!” என்றும்;
துதி செய்து துன்று மலர் கொண்டு தூவிச்
              சூழும் வலம் செய்து தொண்டு பாடி,
“கதிர் மதி சேர் சென்னியனே! காலகாலா!
          கற்பகமே!” என்று என்றே கதறா நில்லே!.