331 | கற்பகமும் இரு சுடரும் ஆயினானை, காளத்தி கயிலாய மலை உளானை, வில் பயிலும் மதன் அழிய விழித்தான் தன்னை, விசயனுக்கு வேடுவனாய் நின்றான் தன்னை, பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை, பொருந்தார் சிந்தை அற்புதனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!. |