332 | பாதி ஒரு பெண், முடிமேல் கங்கை யானை, பாசூரும் பரங்குன்றும் மேயான் தன்னை, வேதியனை, தன் அடியார்க்கு எளியான் தன்னை, மெய்ஞ் ஞான விளக்கானை, விரையே நாறும் போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம் கொண்டு இருந்தானை, போற்றுவார்கள் ஆதியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடையேன் அருவினை நோய் அறுத்த ஆறே!. |