334 | சுடர்ப் பவளத் திருமேனி வெண் நீற்றானை, சோதிலிங்கத் தூங்கானை மாடத்தானை, விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்தன்னை, மிக்க(அ)அரணம் எரியூட்ட வல்லான் தன்னை, மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை, மதியார் வேள்வி அடர்த்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!. |