337 | காலனைக் காலால் காய்ந்த கடவுள் தன்னை, காரோணம் கழிப்பாலை மேயான் தன்னை, பாலனுக்குப் பாற்கடல் அன்று ஈந்தான் தன்னை, பணி உகந்த அடியார்கட்கு இனியான் தன்னை, சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை, பவளம் ஈன்ற ஆலவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!. |