379 | “வில் ஆடி வேடனே!” என்றேன், நானே; “வெண்நீறு மெய்க்கு அணிந்தாய்!” என்றேன், நானே; “சொல் ஆய சூழலாய்!” என்றேன், நானே; “சுலா ஆய தொன்னெறியே!” என்றேன், நானே; “எல்லாம் ஆய் என் உயிரே!” என்றேன், நானே; “இலங்கையர்கோன் தோள் இறுத்தாய்!” என்றேன், நானே; “அல்லா வினை தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்றுஎன்றே நான் அரற்றி நைகின்றேனே!. |