| 378 | “கச்சி ஏகம்பனே!” என்றேன், நானே; “கயிலாயா! காரோணா!” என்றேன், நானே; “நிச்சல் மணாளனே!” என்றேன், நானே; “நினைப்பார் மனத்து உளாய்!” என்றேன், நானே; “உச்சம் போது ஏறு ஏறீ!” என்றேன், நானே; “உள்குவார் உள்ளத்தாய்!” என்றேன், நானே; “அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |