35 | முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே; முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே; கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே; கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே; பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே; பெரு நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆகி அண்டத்துக்கு அப்பால் ஆய் இப் பாலானே;- அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே. |