401 | அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு, அமரர்கள் தம் தலை காத்த ஐயர்; செம்பொன் சிலை எடுத்து மா நாகம் நெருப்புக் கோத்துத் திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்; “நிலை அடுத்த பசும் பொன்னால், முத்தால், நீண்ட நிரை வயிரப் பலகையால், குவையாத் துற்ற மலை அடுத்த மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே. |