440 | முற்றாத பால் மதியம் சூடினானே! முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே! உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே! உலகு ஓம்பும் ஒண்சுடரே! ஓதும் வேதம், கற்றானே, எல்லாக் கலைஞான(ம்)மும்! கல்லாதேன் தீவினை நோய் கண்டு போகச் செற்றானே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |