| 443 | ஆர்ந்தவனே! உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே! அளவு இலாப் பெருமையானே! கூர்ந்தவனே! குற்றாலம் மேய கூத்தா! கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்திப் பேர்ந்தவனே! “பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான்!” என்று எப்போதும் பேசும் நெஞ்சில் சேர்ந்தவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ் ஒளியே! சிவனே! உன் அபயம், நானே. |