445தன்னவனாய், உலகு எல்லாம் தானே ஆகி,
   தத்துவனாய், சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே!
என்னவனாய், என் இதயம் மேவினானே! ஈசனே!
                         பாச வினைகள் தீர்க்கும்
மன்னவனே! மலை மங்கை பாகம் ஆக வைத்தவனே!
                   வானோர் வணங்கும் பொன்னித்
தென்னவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்
             ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.