489 | சந்திரனும் தண்புனலும் சந்தித்தான் காண்; தாழ் சடையான் காண்; சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண்; அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண்; அவ் உருவில் அவ் உருவம் ஆயினான் காண்; பந்தரத்து நால் மறைகள் பாடினான் காண்; பலபலவும் பாணி பயில்கின்றான் காண்; மந்திரத்து மறை பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே. |