538 | முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும்; மொய் பவளக்கொடி அனைய சடையார் போலும்; எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும்; இரு-நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்; மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும்; வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்; அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே. |