569பெருகி அலைக்கின்ற ஆறே, போற்றி! பேரா
               நோய் பேர விடுப்பாய், போற்றி!
உருகி நினைவார் தம் உள்ளாய், போற்றி!
           ஊனம் தவிர்க்கும் பிரானே, போற்றி!
அருகி மிளிர்கின்ற பொன்னே, போற்றி!
              ஆரும் இகழப்படாதாய், போற்றி!
கருகிப் பொழிந்து ஓடும் நீரே, போற்றி!
          கயிலை மலையானே, போற்றி போற்றி!.