662உரித்தானை, மத வேழம் தன்னை; மின் ஆர் ஒளி
                முடி எம்பெருமானை; உமை ஓர்பாகம்
தரித்தானை; தரியலர் தம் புரம் எய்தானை; தன்
        அடைந்தார் தம் வினை நோய் பாவம் எல்லாம்
அரித்தானை; ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு
   அறம், பொருள், வீடு, இன்பம், ஆறு அங்கம், வேதம்,
தெரித்தானை; திரு நாகேச்சுரத்து உளானை,
                 சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.