730 | அணவு அரியான் கண்டாய்; அமலன் கண்டாய்; அவி நாசி கண்டாய்; அண்டத்தான் கண்டாய்; பண மணி மா நாகம் உடையான் கண்டாய்; பண்டரங்கன் கண்டாய்; பகவன் கண்டாய்; மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே. |