Try error :java.sql.SQLException: Closed Resultset: next
741அரிபிரமர் தொழுது ஏத்தும் அத்தன் தன்னை,
         அந்தகனுக்கு அந்தகனை, அளக்கல் ஆகா
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை, எண்
             ஆகிப் பண் ஆர் எழுத்து ஆனானை,
திரிபுரம் செற்று ஒருமூவர்க்கு அருள் செய்தானை,
      சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன் தன்னை,
நரி விரவு காட்டு அகத்தில் ஆடலானை,
            நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.