745 | கான் நல் இளங் கலி மறவன் ஆகி, பார்த்தன் கருத்து அளவு செருத் தொகுதி கண்டார் போலும்; ஆன் நல் இளங் கடு விடை ஒன்று ஏறி, அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும் தேன் நல் இளந் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம்பாளை விரி தேறல் நாறும், கூனல் இளம்பிறை தடவு கொடி கொள், மாடக் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே. |