887அலங்கல் சடை தாழ, ஐயம் ஏற்று(வ்), அரவம் அரை ஆர்க்க
                                      வல்லார் போலும்;
வலங்கை மழு ஒன்று உடையார் போலும்; வான் தக்கன்
                            வேள்வி சிதைத்தார் போலும்;
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து,
                   மெய்ஞ்ஞரம்பால் கீதம் கேட்டு, அன்று,
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர்த் தான்
                                     தோன்றி ஈசனாரே.