6.94 பொது நின்ற திருத்தாண்டகம் |
920 | இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி, இயமானனாய், எறியும் காற்றும் ஆகி, அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி, ஆகாசம் ஆய், அட்ட மூர்த்தி ஆகி, பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி, நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி, நிமிர் புன்சடை அடிகள் நின்ற ஆறே!. |
|
உரை
|