Try error :java.sql.SQLException: Closed Resultset: next
421அலை ஆர் வினைத் திறம் சேர் ஆக்கையுள்ளே
        அகப்பட்டு, உள் ஆசை எனும் பாசம் தன்னுள்
தலை ஆய், கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து
            தளர்ந்து, மிக, நெஞ்சமே, அஞ்ச வேண்டா!
இலை ஆர் புனக் கொன்றை, எறிநீர், திங்கள்,
   இருஞ்சடைமேல் வைத்து உகந்தான்; இமையோர் ஏத்தும்
நிலையான; உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா
                       நினைந்தக்கால் உய்யல் ஆமே.