511 | அண்ணாமலை அமர்ந்தார்; ஆரூர் உள்ளார்; அளப்பூரார்; அந்தணர்கள் மாடக்கோயில் உண்ணாழிகையார், உமையாளோடும்; இமையோர் பெருமானார்; ஒற்றியூரார்; பெண்ணா கடத்துப் பெருந் தூங்கானை-மாடத்தார்; கூடத்தார்; பேராவூரார் விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே. |