770அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக் கண்டேன்;
          அவ் அவர்க்கே ஈந்த கருணை கண்டேன்;
முடி ஆர் சடைமேல் அரவம் மூழ்க மூரிப்
                  பிறை போய் மறையக் கண்டேன்;
கொடி, ஆர், அதன்மேல் இடபம் கண்டேன்;
           கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்;
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன்-
            வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.