807அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்;
        அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்;
மலை ஆர்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்;
    வானோர்கள் முடிக்கு அணி ஆய் நின்றான் கண்டாய்;
இலை ஆர்ந்த திரிசூலப்படையான் கண்டாய்; ஏழ்
                  உலகும் ஆய் நின்ற எந்தை கண்டாய்;
கொலை ஆர்ந்த குஞ்சரத் தோல் போர்த்தான்
    கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.