907 | அருந்தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி, அடல் அரக்கன் தடவரையை எடுத்தான் திண்தோள் முரிந்து, நெரிந்து, அழிந்து, பாதாளம் உற்று, முன் கை நரம்பினை எடுத்துக் கீதம் பாட, இருந்தவனை; ஏழ் உலகும் ஆக்கினானை; எம்மானை; கைம்மாவின் உரிவை போர்த்த, திருந்து எறும்பியூர் மலைமேல், மாணிக்கத்தை; செழுஞ்சுடரை, சென்று அடையப் பெற்றேன், நானே. |