957அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன்;
   அலர் கொன்றைத்தார் அணிந்த ஆறு கண்டேன்;
பலிக்கு ஓடித் திரிவார் கைப் பாம்பு கண்டேன்;
            பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்;
கலிக் கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்; கறை
           மிடறும் கண்டேன்; கனலும் கண்டேன்;
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன்
        -மறை வல்ல மா தவனைக் கண்ட ஆறே!.