476 | உலந்தார் தலைகலன் ஒன்று ஏத்தி, வானோர் உலகம் பலி திரிவாய்! உன்பால் அன்பு கலந்தார் மனம் கவரும் காதலானே! கனல் ஆடும் கையவனே! ஐயா! மெய்யே மலம் தாங்கு உயிர்ப்பிறவி மாயக் காய மயக்குளே விழுந்து, அழுந்தி, நாளும் நாளும் அலந்தேன்; அடியேனை, “அஞ்சேல்!” என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!. |