482உய்த்தவன் காண்; உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண்;
            ஓங்காரத்து ஒருவன் காண்; உலகுக்கு எல்லாம்
வித்து அவன் காண்; விண் பொழியும் மழை ஆனான் காண்;
   விளைவு அவன் காண்; விரும்பாதார் நெஞ்சத்து என்றும்
பொய்த்தவன் காண்; பொழில் ஏழும் தாங்கினான் காண்;
               புனலோடு, வளர்மதியும், பாம்பும், சென்னி
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி
         வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.