625உரை ஆரும் புகழானே! ஒற்றியூராய்! கச்சி
                    ஏகம்பனே! காரோணத்தாய்!
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார் பால்
    மிக்கானே! அக்கு, அரவம், ஆரம், பூண்டாய்!
திரை ஆரும் புனல் பொன்னித் தீர்த்தம் மல்கு
    திரு ஆனைக்காவில் உறை தேனே! வானோர்-
அரையா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
   அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.