853 | உரித்தானை, களிறு அதன் தோல் போர்வை ஆக; உடையானை, உடை புலியின் அதளே ஆக; தரித்தானை, சடை அதன் மேல் கங்கை, அங்கைத் தழல் உருவை; விடம் அமுதா உண்டு, இது எல்லாம் பரித்தானை; பவள மால்வரை அன்னானை; பாம்பு அணையான் தனக்கு, அன்று, அங்கு ஆழி நல்கிச் சிரித்தானை; தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம் பொழிலானை; சிந்தி, நெஞ்சே!. |