300 | எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்; ஏழ்கடலும் ஏழ் உலகும் ஆயினான்காண்; வம்பு உந்து கொன்றை அம்தார்-மாலையான்காண்; வளர்மதி சேர் கண்ணியன்காண்; வானோர் வேண்ட, அம்பு ஒன்றால் மூ எயிலும் எரிசெய்தான்காண்; அனல் ஆடி, ஆன் அஞ்சும் ஆடினான்காண்- செம்பொன் செய் மணி மாடத் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |